தலைவலி இத்தனை நோய்களுக்கு அறிகுறியா..!!

இப்போது இருக்கும் காலகட்டத்தில் நாம் அனைவரும் மொபைல் மற்றும் கம்ப்யூட்டரின் முன்பாக தான் அதிக நேரம் உட்கார வேண்டியதாக இருக்கிறது. இதன் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தலைவலி, அவ்வப்போது வந்து போகும். ஆனால் மருத்துவர்கள் இந்த தலைவலி ஒரு சில நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம் என்கின்றனர். ஆகையால் தலைவலி எதனால் வருகிறது என்பதை இந்த பதிவில் காண்போம்.

ஒற்றைத் தலைவலி: இந்த தலைவலி மிகவும் தீவிரமான ஒன்றாகும். ஒரு பக்கம் மட்டும் கடுமையான வலியுடன் வாந்தி கண்ணெரிச்சல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். ஒருவேளை இந்த தலைவலியினால் பாதிப்பு இருந்தால் உடனே மருத்துவமனை சென்று மருந்து எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

உயர் ரத்த அழுத்தம்: தலைவலி, இரத்த அழுத்தம் திடீரென்று அதிகரித்தாலும் வரும். ஒருவேளை உங்களுக்கு ரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் தலைவலி வந்தவுடன் மருத்துவமனைக்கு செல்வது மிகவும் நல்லது.

பதட்டம்: ஒரு சிலருக்கு பயம் மற்றும் பதட்டத்தின் காரணமாக தலைவலி ஏற்பட நேரிடும். அப்படி தலைவலி ஏற்பட்டால் இது ரத்த அழுத்தத்திற்கு வழிவகிக்கும். ஆகையால் பதட்டத்தினால் தலைவலித்தாள் உடனே மருத்துவமனைக்கு செல்லவும்.

மூளை கட்டி: தலைவலியுடன் காய்ச்சல் வாந்தி தலை சுற்றுதல் பார்வை குறைபாடு போன்ற பிரச்சனைகள் நேர்ந்தால் இது மூளை கட்டி நோயின் அறிகுறியாக இருக்கலாம். இப்படி நேர்ந்தால் சற்றும் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு செல்வது நல்லது.

Read Previous

அளவோ சிறுசு.. பலனோ பெருசு.. உடல் சூட்டை சட்டுனு கூலாக்க இந்த ஒரு பொருள் போதும்..!!

Read Next

இந்த ஐந்து பொருட்கள் மட்டும் போதும்..!! இனி மூட்டு வலி பறந்து போகும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular