தாங்க முடியாத குதிகால் வலிக்கு அற்புத தீர்வுகள்..!!

Oplus_131072

 

நம்மில் பலர் அடிக்கடி குதிகால் வலியினால் அவதிப்படுவதுண்டு.

குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள்ளன. இந்த 2 எலும்புகளுக்கிடையே உள்ள சப்தேலார் என்ற இணைப்பில் ஏற்படும் பிரச்னைகளால் குதிகால் வலி ஏற்படலாம்.

குதிகால் வலி வருவதற்கு முக்கிய காரணம் காயங்கள், பிடிப்புகள், எலும்பு முறிவு, உடல் பருமன் மற்றும் பொருந்தாத காலணிகளை அணிவது போன்றவை ஆகும்.

3 டேபிள் ஸ்பூன் எப்சம் உப்பை வெதுவெதுப்பான நீரில் போட்டு, பாதங்களை அந்நீரில் 20 நிமிடம் ஊற வையுங்கள். பின் பாதங்களை நன்கு உலர வைத்து, மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி குதிகால் பகுதியை மசாஜ் செய்யுங்கள்.

ஒரு கப் பாலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து, சிறிது தேன் சேர்த்து தினமும் 2 முறை குடித்து வர, குதிகால் வலி நீங்கும்.

வெறும் காலில் சுவற்றின் முன் சற்று இடைவெளி விட்டு நிற்க வேண்டும். பின் இரண்டு கைகளையும் சுவற்றில் பதித்து, ஒரு காலை முன்புறம் எடுத்து வைத்து ஸ்ட்ரெட்ச் செய்யுங்கள். இப்படி 30 நொடிகள் செய்து, மறுகாலை மாற்றி 30 நொடிகள் செய்ய வேண்டும்.
குதிகாலை மசாஜ் செய்வதன் மூலமும், குதிகால் வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் மசாஜ் செய்யும் போது, அது தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, குதிகாலில் உள்ள அழுத்தத்தைத் தடுத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

கடுகு எண்ணெய் கொண்டு குதிகால் பகுதியை மசாஜ் செய்யுங்கள்.

குதிகால் வலியால் கஷ்டப்படுபவர்கள், தினமும் இஞ்சி டீயைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள் அல்லது இஞ்சியை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.

ஒரு கப் நீரில் 1/4 கப் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடேற்றிக் கொள்ளுங்கள். பின் ஒரு துணியை அந்நீரில் நனைத்து நீரைப் பிழிந்து வலியுள்ள பகுதியில் 15-20 நிமிடம் வைத்து எடுங்கள். இதனால் குதிகால் வலி சரியாகும்.

1/4 கப் வெதுவெதுப்பான ஆலிவ் ஆயிலில் 1 டேபிள் ஸ்பூன் மிளகு சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இப்படி செய்வதன் மூலம் குதிகால் வலியில் இருந்து விடுபடலாம்.

சிறிது ஆளி விதை எண்ணெயி வெதுவெதுப்பாக சூடேற்றி, ஒரு துணியில் நனைத்து குதிகால் பகுதியைச் சுற்றி 1 மணிநேரம் ஊற வையுங்கள். இதனால் குதிகால் வலி சரியாகும்.

1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, குதிகால் பகுதியில் தடவுங்கள். இதன் மூலம் கடுமையான குதிகால் வலியில் இருந்து விடுபடலாம்.

நறுமண எண்ணெய்களான ரோஸ்மேரி அல்லது லாவெண்டர் எண்ணெய்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், குதிகால் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு இந்த எண்ணெய்களுள் ஏதேனும் ஒன்றை வெதுவெதுப்பாக சூடேற்றி, குதிகால் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வலி வருவதை முற்றிலும் தடுக்கலாம்.

 

Read Previous

அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள்..ஏன் தெரியுமா..??

Read Next

26 வகையான நோய்களுக்கு தீர்வளிக்கும் ஒரே மருந்து..!! இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular