தாயின் மடியில்
♦போகும் வழியில் ….
ஒரு மின்கம்பத்தில் ….
♦ஒரு சிறு துண்டு காகிதம் ….
எழுதி தொங்க விட பட்டிருந்தது.
♦ அப்படி என்னதான் …
அதில் எழுதியிருக்கு …
♦என்ற ஆர்வத்தில் …
நானும் போய் படித்தேன்.
♦அதில் ” என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது.
♦யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன்.
♦எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை” என்று விலாசத்துடன் எழுதியிருந்தது.
♦எனக்கும் பொழுது போகவில்லை, ..
♦அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன்.
♦ “இந்த அம்மாவா,
கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும்.
♦அங்க தான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு”.
♦அங்கே ஓர் சிறிய கீத்து .கொட்டகை.
♦ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது.
♦வெளியில் ,
கண்கள் குழி விழுந்து,
எலும்பும் தோலுமாக
வயதான ஓர் அம்மா .
♦என் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ?
♦அம்மா நான் இந்த வழியாக வந்தேன்,
♦எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது.
♦அது உங்களிடம் தரலாம் என்று வந்தேன்.
♦கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார்.
♦தம்பி ரெண்டு நாளா ….
கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து …..
♦50 ரூபா கீழே விழுந்து கிடைச்சது என்று சொல்லி குடுத்துட்டு போறாங்க..
♦அந்த கடிதம் நான் எழுதவில்லை.
♦எனக்கு எழுத படிக்க தெரியாது.
♦பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லி கொடுத்து திரும்பினேன்.
♦தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் ….
♦அந்த கடிதத்தே மறக்காமல் கிழித்து போட்டு விடு என்று அறிவுரைத்தாள் அந்த தாய்.
♦என் மனதில் வித விதமான எண்ணங்கள்.
♦யார் அந்த கடிதத்தை எழுதி இருப்பார்.
♦அந்த கடித்ததே கிழித்து விடு
என்று அந்த அம்மா ஒவொருவரிடமும் கூறி கொண்டுதான் இருப்பார்.
♦ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை.
♦யாரும் இல்லாமல் …
அனாதையாக வாழும் …..
♦ஓர் உயிருக்கு கடித வடிவில்
உதவி செய்த அந்த நண்பருக்கு
♦மனத்தால் நன்றி சொல்லி கொண்டேன்.
♦நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்க்கு ஆயிரம் வழி.
♦மனதில் யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம்.
“♦ அண்ணே இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா?
♦கீழே இருந்து 50 ரூபாய் கிடைத்தது.
அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா?




