Oplus_131072
அளவில் சிறியதாக இருந்தாலும், பூசணி விதைகள் உடலை உள்ளிருந்து வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.
இதில் புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம், இரும்புச்சத்து, துத்தநாகம் (Zinc) மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. புரதமும் நார்ச்சத்தும் இதில் அதிகளவில் உள்ளதால், இதனை உட்கொள்ளும்போது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, தேவையற்ற பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
மேலும், இதிலுள்ள அசாத்திய மெக்னீசியம் சத்து இரத்த நாளங்களைத் தளரச் செய்வதன் மூலம் இரத்த அழுத்தத்தைச் (BP) சீராக்குகிறது; கொழுப்பைக் கட்டுப்படுத்தி இதயத்தையும் பாதுகாக்கிறது.
பூசணி விதைகள் சருமத்திற்கும் கூந்தலுக்கும் ஒரு சிறந்த இயற்கை ஊட்டச்சத்தாகும். இதிலுள்ள துத்தநாகம், வைட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி உதிர்வதைத் தடுத்து, புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன் சருமத்திற்கு இயற்கையான பொலிவைத் தருகின்றன.
அத்தோடு, மெக்னீசியம், வைட்டமின் ஈ ஆகியவற்றுடன் துத்தநாகம் இணைந்து உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை (Immune System) பலப்படுத்துகிறது. இது பருவகாலங்களில் ஏற்படும் தொற்றுநோய்களிலிருந்து உடலை ஒரு கவசமாக நின்று பாதுகாக்கிறது.




