நாம் அனைவரும் தினமும் காலை எழுந்தவுடன் காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் எப்போதெல்லாம் மன அழுத்தமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் காபியை தான் நாம் குடிப்போம். அதிலும் ஒரு சில பேர் ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து காபிகளை குடித்து விடுகின்றன. இப்படி குடிப்பதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா. அதை இந்த பதிவில் காண்போம்.
காப்பியே அதிகமாக கொடுத்து வந்தால் இதய நோய் வரும் அபாயம் அதிகமாகும். மேலும் மன அழுத்தத்தினால் இந்த காப்பியை நீங்கள் குடித்தால் அது இன்னும் அதிகமாகத்தான் ஆகும். மேலும் ரத்த அழுத்த பிரச்சனைகளும் அதிகமாகும். அதாவது காபி குடிப்பது மிகவும் நல்லது தான். ஆனால் அதை அளவோடு வைத்திருக்க வேண்டும். அளவை மீறி குடித்தால் நமது உடலுக்கு நிறைய பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
நமது உடலை ஆரோக்கியமாகவும் ஊட்டச்சத்து உடையதாகவும் வைத்திருக்க வேண்டியது நமது கடமையாகும் ஆகையால் இது போன்ற உணவுகளை அளவோடு சாப்பிட்டு பயன் பெறுவோம்.




