அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா திமுகவில் இணைந்த நிலையில், அதிமுகவின் இன்னொரு முக்கிய புள்ளி விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வட சென்னையை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேருடன் திமுகவில் இணைய உள்ளாராம். இந்த மாபெரும் இணைப்பு விழா விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு திமுக சார்பாக தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படலாம் என கூறுகின்றனர்.




