திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திமுகவின் 12-வது மாநில மாநாடு இன்று (மார்ச்.9) நடைபெறவுள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை நேரடியாக சந்திக்கும் வகையில் 500 மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்டமான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு மிக அருகில் சென்று அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இந்த ‘ரேம்ப் வாக்’ முறை திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




