திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று தனது பிரசாரத்தை தொடங்கியபோது, அவரது கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் ஒன்று நுழைந்தது. இது பெரும் பேசுபொருளாகியுள்ளது. முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தின் போது கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ்கள் வந்ததாக குற்றம்சாட்டி இருந்தார். அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே ஆம்புலன்ஸை வைத்து கடுமையான விமர்சனங்கள் நடந்து வரும் நிலையில், விஜய்யின் கூட்டத்திலும் ஆம்புலன்ஸ் நுழைந்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.




