திருநெல்வேலி அல்வா…
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா என்றால் உலகப் பிரசித்தம்.
அல்வா என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது திருநெல்வேலி தான்.
இருட்டுக்கடை அல்வாவின் பூர்வீகம், தென்காசி மாவட்டத்தில் உள்ள சொக்கம்பட்டி எனும் ஒரு சிறிய ஊர்.
தரமான சம்பா கோதுமையை ஒருநாள் முன்பாகவே ஊற வைத்து விட்டு, பின்னர் அடுத்த நாள் அதை அரைத்து, நெய், சர்க்கரை, முந்திரி பருப்பு, ஜாதிக்காய், குங்குமப் பூ, சேர்த்து அல்வா செய்கிறார்கள்.
சொக்கம்பட்டி அல்வா கருப்பட்டியில் செய்கிறார்கள்.
இருட்டுக்கடை அல்வா
தினமும் அந்தி சாயும் நேரத்தில் திறக்கப்படும் இந்த கடைக்குள் பழங்காலத்தில் வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்திகள் மட்டுமே ஏற்றி வைக்கப்படுமாம்.
இன்றும் கூட, அதன் பாரம்பரியத்தை தக்க வைத்துக் கொள்ள ஒரு சிறு மஞ்சள் பல்பு மட்டுமே கடைக்குள் ஒளிர்ந்திருக்கிறது.
இதனால் தான் இதற்கு இருட்டு கடை என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
கோதுமை பாலை பிழிந்து எடுக்க எந்த இயந்திரத்தையும் பயன்படுத்தாமல் கைகளால் உரலில் ஆட்டி பால் எடுக்கப்படுகிறது.
இருட்டுக்கடையின் அல்வா ருசிக்கு திருநெல்வேலியில் பாயும் தாமிரபரணி தண்ணீரும், பாரம்பரியம் மாறாத செய்முறையும் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
திருநெல்வேலி அல்வா ராஜ்புட் அல்வா என்றும் அழைக்கப்படுகிறது.
தொண்டைக்குள் வழுக்கிக் கொண்டு செல்லும் இந்த திருநெல்வேலி அல்வாவின் சுவை ருசித்து பார்க்கும் போதுதான் முழுமையாக உணர முடியும்.




