Oplus_16908288
கரூர் மாநகராட்சி, திருமாநிலையூர் பகுதியில் ரூ. 40.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பேருந்து நிலையம் பணிகள் நிறைவடைந்து, கடந்த ஜூலை 9ஆம் தேதி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இன்று காலை 6.00 மணி முதல் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து வழித்தடம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 24 மணி நேரமும் நகர பேருந்துகள் இயக்கப்படும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.




