துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (நவ., 04) கோவைக்கு வருகை தரவுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஒன்னிபாளையம் கருப்பராயன் கோவில், பெரியநாயக்கன்பாளையம், கோவில்பாளையம் மற்றும் முக்கிய விருந்தினர் பயணிக்கும் சாலைகள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று இரவு 8 மணி வரை இப்பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.




