தென்னிந்தியாவின் மிகப் பணக்கார நடிகர்கள் பட்டியலில் ரஜினிகாந்த், பிரபாஸ் ,சிவராஜ் குமார் உட்பட்ட அனைவரையும் முந்தி சென்றுள்ளார். ஒருவர் தென்னிந்தியாவின் மிக முக்கியமாக அனைவராலும் விரும்பப்படும் ஒரு நடிகராக இருப்பவர். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மிக முக்கிய இடத்தில் இருப்பவர்.
அவர்தான் நாகார்ஜுனா தெலுங்கு சினிமா உலகத்தில் முக்கிய இடத்தில் இருக்கும் நாகார்ஜுனா படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்திய லைப் ஸ்டைல் ஆசியா ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது .இந்த அறிவிக்கின்படி நாகார்ஜுனாவின் நிகர சொத்து மதிப்பு சுமார் 3010 கோடி என்று தெரியவந்துள்ளது. இவருக்கு ஹைதராபாத் மற்றும் மும்பையில் தலா அருள் ரூ.42.3 கோடி மதிப்பில் பல சொத்துக்கள் உள்ளன.
மேலும் இவரது அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் மூலம் திரைப்பட தயாரிப்பு ரியல் எஸ்டேட் மற்றும் பல வகையான தொழில்களிலும் ஈடுபட்டு உள்ளார். மேலும் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் சுமார் 50 கோடி மதிப்புள்ள குடியிருப்பு 1.50 கோடி மதிப்பில் பிஎம்டபிள்யூ சீரியஸ் 7 கார், ரூ. 90.5 லட்சம் மதிப்புள்ள ஆடி ஏ 7 மற்றும் ரூ.1.76 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ m6, மேலும் 2 கோடி மதிப்பு உள்ள போர்ஷே கெயின் மற்றும் பல்வேறு ரக கார்களை கொண்டு உள்ளார்.




