கடந்த சில நாட்களாகவே தெருக்களில் ஆதரவற்று திரியும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்தகைய மாடுகளை தெரு மாடுகள் என்று அழைக்க கூடாது என்று ராஜஸ்தான் அரசு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, தெருக்களில் ஆதரவற்று சுற்றி திரியும் மாடுகளை தெரு மாடுகள் என்ற வார்த்தைக்கு பதிலாக ” உதவியற்ற மாடுகள் ” என்ற வார்த்தையை பயன்படுத்தி அழைக்க வேண்டும் என்று ராஜஸ்தான் பாஜக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.




