Oplus_131072
‘உணவே மருந்து’ என்பது அந்த காலத்தில் பழமொழி மட்டுமல்ல உண்மை மொழியும் கூட. நம் முன்னோர்கள் அன்றாட உணவுகளையே உடலுக்குத் தேவையான மருந்தாகவும் உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். இன்று மருந்தே உணவாக இருந்தாலும் சில பாரம்பரிய உணவுகள் இன்றும் நம் வாழ்வில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று ‘தேங்காய் சோறு’. காயலில் வெந்தயம்,வெள்ளைப்பூண்டு சேர்த்து செய்வார்கள். வாயுத்தொல்லைக்கு மிகவும் சிறந்த மருந்து. பெண்களின் பிரச்சனைகளுக்கும்,குழந்தை பெற்றவர்களுக்கும் மிகவும் நல்லது.லேசாக அழுகிய தேங்காயில் செய்தால் மணமுமம் சுவையும் இன்னும் தூக்கலாக இருக்கும்.’வாங்கிய தேங்காய் அழுகியிருக்கா,நாளை வீட்டில் தேங்காய் சோறுதான் ‘ என்பது காயலில் இன்றும் உள்ள நடைமுறை.
தேவையான பொருட்கள் :-
அரிசி – 200 கிராம் (லேசாக அழுகி இருந்தால் சூப்பர் )
தேங்காய் -1
வெள்ளைப்பூண்டு-1 பெரியது
வெந்தயம் -1 tsp
உப்பு- தேவைக்கு
தேங்காயை துருவி தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும்.
2,3 முறை பால் எடுக்கலாம். 200 கிராம் அரிசிக்கு 600 மி.லி தண்ணீர் அளந்து எடுத்து அந்த தண்ணீரிலேயே தேங்காய் பால் எடுக்கவும்.
அரிசியை களைந்து தேங்காய் பால் ஊற்றி வெந்தயம் உரித்து அரிந்த வெள்ளைப்பூண்டு,உப்பு சேர்த்து கொதிக்க விட்டு வேக விடவும்.
மிகவும் சுலபமான செய்முறை கொண்ட ஆரோக்கியமான உணவு இது.
தேங்காய் சோற்றுக்கு கருவாடு,மாசி,முட்டை சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.




