ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மார்க்கெட்டில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ரூ.20-க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி, தற்போது வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக விலை உயர்ந்துள்ளது. அதே போல் திண்டுக்கல், கோவை, தென்காசி, சென்னை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்ட சந்தைகளிலும் விலை ரூ.20 வரை உயர்ந்துள்ளது.




