தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் சினிமா சாதனை.. முதல்வர் விஜய் வாழ்த்து..!!

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் சினிமா 10 விருதுகளை வென்று பெருமை சேர்த்துள்ளது. இந்த சாதனைக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘ராயன்’, ‘கேப்டன் மில்லர்’, ‘அமரன்’, ‘மகாராஜா’, ‘மெய்யழகன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் விருதுகளை பெற்ற நடிகர் தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு உள்ளிட்ட கலைஞர்களுக்கு முதல்வர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் படைப்பாற்றல் மற்றும் திறமைக்கு இந்த விருதுகள் மிகப்பெரிய அங்கீகாரம் எனக் குறிப்பிட்ட அவர், வரும் காலங்களிலும் தமிழ் சினிமா பல்வேறு உயரங்களைத் தொட்டு புதிய சாதனைகளை படைக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Read Previous

கோவில் பண்டிகை பேனரில் திரிஷா சாமி வேடம்.. சர்ச்சையைத் தொடர்ந்து படம் மாற்றம்..!!

Read Next

மதுரையில் பட்டியல் சமூக மக்களின் வீடுகள் சேதம்: 3 பேர் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular