சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் விஜய் தொடர்பான அந்த பேனரில், நடிகை திரிஷா சாமி வேடத்தில் இடம்பெற்றிருந்த புகைப்படம் சில பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அமைப்புகளின் எதிர்ப்பை பெற்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த பேனரில் இடம்பெற்றிருந்த திரிஷாவின் புகைப்படம் இரவோடு இரவாக மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத உணர்வுகள் தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும் என்ற கருத்துகளும் எழுந்துள்ளன.




