தவெக அரசுக்கு எதிராக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை குற்றங்கள், கொலைகள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. முதலமைச்சர் விஜய், நேரடியாக இந்த விவகாரங்களில் கவனம் செலுத்தி சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நிரந்தரமான தீர்வுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




