த.வெ.க முதல் மாநில மாநாடு..!! தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்..!!

த.வெ.க முதல் மாநில மாநாடு..!! தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்..!!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று (அக்டோபர் 27) நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஓர் பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில், மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று என்று கூறியுள்ளார். மாநாட்டுக்கு வருவோர் பொதுமக்கள், போக்குவரத்திற்கு இடையூறு செய்யாமல் வரவேண்டும். மாநாட்டில் மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது இத்தகவல் சமூகவலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Read Previous

10 ரூபாய் காசு செல்லுமா ?.. செல்லதா?.. RBI விளக்கம்..!!

Read Next

5 வருடத்தில் இவ்வளவு லாபமா?.. ஜாக்பாட் திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular