கடந்த 2 ஆண்டுகளில் கையெழுத்தான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களை உண்மையான தொழிற்சாலைகளாக மாற்றும் நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு நிர்வாகத் தாமதங்கள் மற்றும் சிவப்பு நாடா நடைமுறைகளால் நீண்ட காலம் எடுத்த சிப்காட் நில ஒதுக்கீட்டு செயல்முறை தற்போது விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




