தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்றார். அப்போது அவரே காரை ஓட்டியும் சென்றார். இதுகுறித்தான வீடியோ இணையத்தில் வெளியானது. அதில், காருக்குள் ஒரு கிளாஸ் இருந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. அந்த கிளாஸில் இருந்தது என்னவென்பது குறித்து விவாதம் கிளம்பியிருக்கிறது. பலர் ‘அது ஆப்பிள் ஜூஸ்’ என்றும் சிலர் ‘மதுபானம் தான்’ என்றும் கூறி வருகின்றனர்.




