உத்தரப் பிரதேசத்தின் லலித்பூரில், கால்களைப் பிடிக்க மறுத்த தலித் இளைஞர் மனோஜ் அஹிர்வாரை (30), ஆதிக்க சாதியைச் சேர்ந்த மோனு யாதவ் மற்றும் அவனது நண்பர்கள் அறைக்குள் பூட்டி பெல்ட், தடிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மனோஜ் சிகிச்சைக்காகச் செல்லும் வழியில் உயிரிழந்தார். புகாரின் பேரில் மோனு யாதவ் உட்பட மூவரைக் கைது செய்த போலீசார், அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பைப் போட்டுள்ளனர்.




