நடந்து சென்ற மூதாட்டி மீது கார் மோதி உயிரிழப்பு..!! பெரும் சோகம்..!!

விஜயபுரம் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது கார் மோதி உயிரிழப்பு.

கரூர் மாவட்டம், மூக்கணாங்குறிச்சி அருகே உள்ள விஜயபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீரங்கம் பிள்ளை மனைவி வெள்ளையம்மாள் வயது 84.

இவர் செப்டம்பர் 21ஆம் தேதி அதிகாலை 5: 30- மணி அளவில், கரூர் – ஈசநத்தம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

இவர் விஜயபுரம் பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தபோது,

கரூர், வடக்கு காந்திகிராமம், ஜே ஜே கார்டனைச் சேர்ந்த பெருமாள் மகன் கோபால் வயது 25 என்பவர் ஓட்டிச் சென்ற மினி பேருந்து, நடந்து சென்று கொண்டிருந்த வெள்ளையம்மாளின் பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வெள்ளையம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

வெள்ளையம்மாளை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த வெள்ளையம்மாளின் மருமகன் வீராசாமி வயது 73 என்பவர், அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உயிரிழந்த வெள்ளையம்மாளின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் மினி பேருந்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய கோபால் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Read Previous

வேட்டைக்கு சென்ற 14 வயது சிறுவன் பலி..!! போலீசார் விசாரணை..!!

Read Next

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular