தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று (ஆக.31) கரைக்கப்பட்டன. இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியில் அனுமதிக்கப்படாத வழியாக விநாயகர் சிலையை எடுத்துச் செல்ல முயன்ற இந்து முன்னணி அமைப்பினர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்பை சேர்ந்த நடிகரும், சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் உள்ளிட்ட 53 பேர் மீது போலீஸ் வழக்கு பதிந்துள்ளது.




