நடிகர் வெங்கல் ராவுக்கு வடிவேலு செய்த நிதியுதவி.. எவ்வளவு கொடுத்தார் தெரியுமா?..

பிரபல காமெடி நடிகர் வெங்கல்ராவ் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் சிலர் நிதி உதவி செய்து வருகின்றனர் என்பதை பார்த்தோம். அந்த வகையில் தற்போது வடிவேலு நிதி உதவி செய்த தகவல் வெளியாகி உள்ளது.

வடிவேலு நடித்த பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்த கலக்கியவர் வெங்கல் ராவ் என்பதும், அவரது ஒவ்வொரு காமெடியும் குலுங்கி குலுங்கி சிரிக்கும் வகையில் இருக்கும் என்பதும் தெரிந்தது. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட வெங்கல்ராவ் கடந்த சில வாரங்களாக உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற பணம் இல்லை என்பதால் அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சை தொடர தனக்கு தன்னிடம் பணம் இல்லை என்றும் எனவே தனக்கு சினிமா கலைஞர்கள் நிதியுதவி செய்து உதவ வேண்டும் என்றும் வெங்கல்ராவ் வீடியோ ஒன்றின் மூலம் கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கையை அடுத்து நடிகர் சிம்பு 2 லட்சம், ஐஸ்வர்யா ராஜேஷ் 25 ஆயிரம், கேபிஒய் பாலா ஒரு லட்சம் என நடிகர் நடிகைகள் சிலர் நிதி உதவி செய்தனர்.

இந்த நிலையில் தன்னுடன் பல திரைப்படங்களில் வெங்கல்ராவ் நடித்ததை அடுத்து வடிவேலுவும் தற்போது தனது பங்கிற்கு ரூபாய் ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி செய்துள்ளார். மேலும் அவருக்கு போன் செய்து அவரது உடல்நிலை குறித்தும் நடிகர் வடிவேலு கேட்டறிந்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

Read Previous

IND vs SA 2024 WC Final: இறுதிப்போட்டியில் மழை குறுக்கீடு இல்லை.. வானிலை அறிக்கை வெளியீடு..!!

Read Next

கற்பூரத்தை இப்படி வைத்தால் வீட்டில் செல்வம் செழிக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular