நண்பரை பிளேடால் கிழித்த வாலிபர் கைது..!! போலீசார் விசாரணை..!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 24). இவர் திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்தார். இவருடைய நண்பர் திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த சேரன் (27). நேற்று முன்தினம் இரவு 2 பேரும் திருப்பூர் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு மது குடித்துள்ளனர். இருவரும் பணத்தை பங்கிட்டு மது அருந்தியபோது பிரசாந்த் கூடுதலாக மது குடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த பிரசாந்த் தான் வைத்திருந்த சிறிய பிளேடால், சேரனின் கையில் கிழித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் காயமடைந்தார். உடனடியாக சேரனை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். சேரன் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் பிரசாந்த்தை கைது செய்தனர்.

Read Previous

சீத்தாபழத்தில் உள்ள சத்துக்கள் எதற்காக பயன்படுகிறது தெரியுமா?..

Read Next

தமிழக அரசில் Data Entry Operator வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.13,500/-..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular