நத்தம் புறம்போக்கு பட்டா பெறுவது எப்படி ? கிராம நத்தம் நிலத்தில் இவ்வளவு இருக்கா ஆன்லைன் வசதி சபாஷ்…!!

நத்தம் புறம்போக்கு பட்டா வாங்குவது எப்படி கிராம நத்தம் பட்டாக்கள் என்பவை யாவை யார் வேண்டுமானாலும் பொறம்போக்கு பட்டாவை பெற முடியுமா அதற்குரிய விதிமுறைகள் என்னென்ன இந்த நத்தம் பட்டாக்களை ஆன்லைனில் எப்படி பதிவு செய்வது…

நத்தம் என்றால் குளிர்பு பகுதி என்று அர்த்தம் கிராம நத்தம் என்றால் கிராமத்தில் இருக்கும் குடியிருப்பிற்கு என ஒதுக்கப்பட்ட நிலம் என்று பொருள் நத்தம் புறம்போக்கு நிலம் என்றால் நத்தம் குடியிருப்பு பகுதியில் இருக்கும் புறம்போக்கு நிலம் எனப்படும் கிராம நத்தம் நிலத்தை குடியிருப்பு களுக்காக மட்டுமே பயன்படுத்த முடியுமே தவிர வடணிக நோக்கத்திற்கு பயன்படுத்த முடியாது, நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை அரசே நேரடியாக செயல்படுத்தி வருகிறது அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு பகுதிகளில் வசித்து வந்தால் அந்த இடத்திற்கு தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் புதிதாக ஒரு அரசாணை பிறப்பித்து அந்த அரசாணையின்படி கிராமங்களில் 3 சென்ட் அளவிற்கு நகரப்புறங்களில் ஒரு சென்ட் அளவிற்கு நத்தம் இலவச பட்டாவும் வழங்கும் படியான அரசாணை பிறப்பித்து வருகிறது, நத்தம் பட்டா அதன்படி கிராமங்களிலோ அல்லது புறநகர் பகுதிகளிலோ அல்லது நகரங்களிலோ நீண்ட காலமாக நத்தம் குடியிருப்பு பகுதிகளில் பசித்து வந்து அந்த இடத்திற்கு பட்டா வாங்காமல் இருந்தால் சம்பந்தப்பட்ட ஆட்சியர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நத்தம் பட்டா வேண்டி தாராளமாக விண்ணப்பிக்க வேண்டும், நீங்கள் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு பகுதிகளில் குடியிருந்து வீடு கட்டி உங்களுடைய அனுபவத்தில் வைத்திருந்தாலும் அந்த வீட்டிற்க்கான ரசீது எத்தனை வருடம் அந்த வீட்டில் அல்லது அந்த இடத்தில் அனுபவம் செய்து வந்தீர்கள் மற்றும் அதற்கான மின் இணைப்பு மற்றும் இதர ஆவணங்களை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்து இலவச வீட்டு மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம்..!!

Read Previous

உங்கள் சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும் 10 டிப்ஸ்…!!!

Read Next

நெருப்பில் வச்சி சுட்ட தஞ்சை தக்காளி சட்டினி ஈசியாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்…!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular