நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து வீட்டில் தெய்வ சக்தி இருக்கிறதா இல்லையா என்பதை ஒரு சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிப்பார்கள். நம்முடைய வீட்டில் தெய்வங்கள் நடமாட்டம் உள்ளதை பெரியோர்கள் கணித்து சொல்வார்கள். இந்த வகையில் நம் வீட்டில் தெய்வீக சக்தி உள்ளதை எவ்வாறு கண்டறிய முடியும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
குறிப்பாக, தெய்வ சக்தி உள்ள வீட்டில் பல்லிகள் சத்தம் போடும். ஆனால் தெய்வ சக்தி இல்லாத வீட்டில் பல்லிகள் இருந்தால் கூட சத்தம் போடாது. குறிப்பாக பல்லிகள் நிலை வாசலிலும், நம்முடைய வீட்டின் பூஜை அறையிலும் சத்தம் கொடுக்கும். இவ்வாறு இருந்தால் கண்டிப்பாக நம் வீட்டில் தெய்வசக்தி உள்ளது என்று அர்த்தம். குறிப்பாக, மஞ்சள், குங்குமம், சந்தனம், சாம்பிராணி, எலுமிச்சை, வேப்பிலை போன்ற பொருட்களின் வாசனை சம்பந்தமே இல்லாமல் நம் வீட்டில் வரும். அவ்வாறு வந்தாலும் நம் வீட்டில் தெய்வசக்தி உள்ளது என்று அர்த்தம். இந்த மாதிரி எந்த அறிகுறிகளும் உங்கள் வீட்டில் இல்லை ஆனால் உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க..
ஒரு வெள்ளிக்கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்துவிட்டு தலை குளித்துவிட்டு அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கி அதை அம்மன் காலில் வைத்து பூஜை செய்து அதை நம் வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்து விடுங்கள். எலுமிச்சை பழம் காய்ந்து விட்டால் நம் வீட்டில் தெய்வ சக்தி உள்ளது என்று அர்த்தம். ஆனால், எலுமிச்சை பழம் அழுகிப் போனால் நம் வீட்டில் தெய்வ சக்தி இல்லை. ஏதோ எதிர்மறை ஆற்றல் உள்ளது என்றுதான் அர்த்தம்.




