‘நம்பிக்கை’.. சோம்பலை சாம்பலாக்கி வெற்றித் திலகமிடு..!! படித்ததில் பிடித்தது..!!

கடுந்துயரம் துரத்தினாலும்

நெடுந்தூரம் பயணப்பட்டு !

 

தரணியே உன் பின் புரணி பேசினாலும்

தனி ஒருவனாய்த் தகர்த்திடு!

 

முக்காலமும் உனக்கு பொற்காலமே

நம்பிக்கையுடன் நடை போடு

 

துரோகம் உன்னை தொடர்ந்தாலும்

புது யாகம் செய்து கடந்து வா!

 

குருதியே நின்று போனாலும்

உன் உறுதியால் மீண்டெழுந்து வா !

 

அவமானங்கள் அணி வகுத்தாலும்

பகுமானமாய் பாய்ந்து வா !

 

யாசிக்கும் நிலையே வந்தாலும்

யோசிக்காமல் முயன்று வா !

 

உறவுகள் உன்னை உதாசித்தாலும்

உத்வேகத்துடன் உந்தி வா!

 

காலமும் நேரமும் சூழ்ச்சி செய்தாலும்

காலடி பதிக்க சுழன்று வா!

 

காட்சிகள் யாவும் பிழையாய் போயினும்

சாட்சிகள் கொண்டு பிழைத்து வா!

 

உடன் வரும் நிழலும் பொய்த்தாலும்

உன் உள்ளத்து நிழலை கூட்டி வா!

 

தேடிய பாதைகள் தொலைந்தே போயினும்

தேவைகள் உணர்ந்து தேடி வா !

 

விண்ணின் மழைத்துளி

மண்ணிற்கே சொந்தம் ….

உந்தன் வியர்வைத்துளி

வெற்றியின் தீ பந்தம்!

 

மயக்கம் கொள்ளாதே,

தயக்கம் கொள்ளாதே ,

மாற்றுவழி கொள்..!

 

ஆதவன் மறைவதும்..

வெண்ணிலா தேய்வதும்..

இயற்கையின் நிதர்சனமே…!

 

மீண்டும் கதிர் வீசி

அதிகாலையில் ஆர்ப்பரிக்கும் ..!

 

உந்தன் முகம் பார்க்க

வெண்ணிலா ஒளி வீசும் ..

அதை நீ உணர் மனமே ..!

 

காலம் கனியும் வரை தென்றலாய் வீசிடு..

கணிந்தபின் புயலாய் புறப்படு !

 

கட்டெறும்பும் காட்டெருமையாகும் !!

 

உன்நேரம் வருவரை

அயராமல் உழைத்திடு!

 

சோம்பலை சாம்பலாக்கி

வெற்றித் திலகமிடு!!!

Read Previous

நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் உடல் ரீதியான பல பிரச்சினைகளுக்கு வீட்டிலேயே இயற்கையான முறையில் மருத்துவம் செய்வார்கள்..!! எப்படி தெரியுமா..??

Read Next

அல்சர் நோய் உள்ளவர்கள் இஞ்சி சாப்பிடலாமா..?? நிச்சயம் கூடாது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular