நல்லெண்ணையை பயன்படுத்தி வந்த நாம் சூரியகாந்தி எண்ணையை எதற்காக பயன்படுத்த தொடங்கினோம்..??

Oplus_131072

 

இந்தியாவில் சராசரியாக ஒரு நபர் 1–1.2 கிலோ சமையல் எண்ணெய் ஒரு மாதத்துக்கு குடிக்கின்றனர் என்று சொல்வதுதான் சரி. ஒரு மனிதனுக்கு தினம் 5 ஸ்பூன் எண்ணெய் நாம் உணவோடு சாப்பிடுகிறோம். அதிகம். தேவையில்லாதது. கெட்ட நவீன வியாபார தந்திரம். விளம்பரங்களில் காட்டி ஏமாற்றிய முதல் முட்டாள்தனம். 50 வருடங்களுக்கு முன்பு ஒரு குடும்பத்துக்கே 100மில்லிதான் மாதத்துக்கு செலவு ஆகும். தற்போது 10–30 மடங்கு தேவை அதிகரித்திருக்கிறது. மக்கள் தொகை இரண்டு மடங்கு. ஆக உள்நாட்டு உற்பத்தி போதவில்லை. இறக்குமதி. வெட்டித்தங்கமும், கொழுப்பு எண்ணெயும் அதிகமாக இறக்குமதி செய்யும் உலகிலேயே முதல் நாடு இந்தியா.

சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பனை எண்ணெய் ஏன் உபயோகத்துக்கு வந்தது ?

இந்தியா பாம் ஆயில் பனைஆயில் மாதத்துக்கு 20லட்சம் டன் அதாவது 20,000 லட்சம் கிலோ அதாவது 200 கோடி லிட்டர் இறக்குமதி செய்கிறோம். சரியா ? ஆம். சமையல் மற்றும் எரி பொருள்.

சன்ஃப்ளவர் ஆயில் சூரியகாந்தி எண்ணெய் 365,000 டன் மற்றும் சோயா ஆயில் 355,000டன் இறக்குமதி. அடேங்கப்பா ?

நாம விவசாயத்தில் என்ன கிழிக்கிறோம். இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியாவிலிருந்து இறக்குமதி. சோயா ஆயில் அர்ஜன்டைனா, பிரேசில்,ரஷ்யா, யுக்ரைனிலிருந்து வருகிறது.

நபர் ஒன்றுக்கு கால்-அரை லிட்டரே மாதத்துக்கு அதிகம். ஆனால் சராசரி இந்தியர் ஒன்றேகால் லிட்டர் எண்ணெய்யை குடித்து உடலில் கொழுப்பைச் சேர்க்கிறார்கள்.

ஏன் இந்தப் பழக்கம் வந்தது ?

நடுத்தர வர்க்கம் உணவில் சுவைகளைத் தேடி அலைந்தது. வறுத்தல் பொரித்தல் நாக்குக்கு சுவை. உணவுப் பழக்கம் சமையல் கஞ்சியிலிருந்து இட்லி தோசை ,கூட்டுப் பொரியல் சப்பாத்தி, பூரி என மாறியது. இறைச்சி உணவில் அதிலுள்ள கொழுப்பே போதும். அதற்கும் மேல் பொரிப்பது, வறுப்பது மிக மோசம்.

இதனால் சூரியகாந்தி , பாம்ஆயில் உபயோகத்துக்கு வந்தது.

சமையல் எண்ணெய் முழுக்க முழுக்க கொளுப்பே:

1.சூரியகாந்தி —15% சாசுரேடட் 85% சாசுரேட்அல்லாத கொளுப்பு.

2.பாமாயில் கொடுமை —50% சாசுரேடட் 40% மானோசாசுரேடட், 10% பாலி சாசுரேடட் ஃபேட்டி ஆசிட்ஸ்.

சுருக்கமாக எல்லா ஆயில்களும் கெடுதி. அதிலும் பாமாயில் மிகக் கொடியது. ஆலிவ் ஆயில் பராவாயில்லை. நல்லெண்ணெய் கெடுதிதான். தேங்காய் எண்ணெய் கெடுதிதான்.

Read Previous

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சோம்பு – 4 வழிகளில் இப்படி எடுத்துக்கோங்க..!!

Read Next

ஈறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கான சில நிவாரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular