சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு தின்பண்டம் தான் இந்த ஐஸ்கிரீம். இதை பிடிக்காது என்று ஒருவராலும் கூற இயலாது. ஒருமுறை சாப்பிட்டால் மறுமுறை சாப்பிட தூண்டும் ஒரு பொருள் தான் இது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழிக்கு இந்த ஐஸ்கிரீமும் பொருந்தும். அளவுக்கு அதிகமாக இந்த ஐஸ்கிரீமை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்னென்னவென்று இந்த பதிவில் காண்போம்.
இந்த ஐஸ்கிரீமை செய்வதற்கு வழி நிவாரனியாக பயன்படுத்தும் டை எத்திலின் கிளைக்கால் என்னும் வேதிப்பொருளை பயன்படுத்துகிறார்கள். இது நமது உடலுக்கு மிகவும் ஆபத்தானதாகும். ஐஸ்கிரீமை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அல்சர் வரும் அபாயம் உள்ளது. மேலும் தொடர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டு வந்தால் நமது கல்லீரல் பாதிப்படைகிறது. இது மட்டும் இல்லாமல் நமது இதயத்தில் வலி ஏற்படும் மற்றும் சிறுநீரகம் பாதிக்கும்.
ஐஸ்கிரீம் சீக்கிரம் உருகாமல் இருக்க ஷாம்பு மற்றும் சோப்புகளின் பயன்படுத்தும் பாலிசார்பேட் 80 என்கிற வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. ஆகையால் ஐஸ்கிரீமை அளவுக்கு அதிகமாக மட்டுமல்லாமல் சாப்பிடுவதையே தவிர்ப்பது மிகவும் நல்லது. எப்போதாவது சாப்பிட்டால் பிரச்சினை வராது ஆனால் தினமும் சாப்பிட்டால் புற்றுநோய் வரும் அபாயம் கூட இருக்கிறது.




