நீ விரும்பிய ஒன்று உன்னிடம் வர வேண்டும் என்பதற்காக நீ உழைக்க வேண்டாம் ஆனால் அதனை முழுமையாக நம்ப வேண்டும் நீ உன்னுடைய செயலில் கவனம் கொண்டால் உனக்கானது உன்னை கிடைக்கும் என்கிறது பிரபஞ்சம்…
நீ ஒன்றை ஆழமாக விரும்பும் பொழுது அந்த ஒன்றும் உன்னை ஆழமாக விரும்பும் நெருங்க நினைக்கும் அதை காதலாக இருந்தாலும் பணமாக இருந்தாலும் பொருளாக இருந்தாலும் இல்லை உனது இலக்காக இருந்தாலும் நீ விரும்பும் அளவிற்கு உன்னை விரும்பும் அந்த இலக்கு, அதை நீ பெறுவதற்கு தகுதியுடையவனாக உன்னை மாற்றிக்கொள்ள வேண்டும், இந்த பிரபஞ்சம் நீர் கேட்கும் அனைத்தையும் அள்ளித்தர உருவாக்கப்பட்டது இந்த பிரபஞ்சத்திடம் முதலில் கேட்க வேண்டும் கேட்டதை விட அளவுக்கு அதிகமாக நம்ப வேண்டும் நம்புவதை காட்டிலும் தனக்கு பிரபஞ்சம் கொடுத்ததைப் போல கற்பனையிலும் கனவிலும் செதுக்க வேண்டும் இப்படி செதுக்குவதன் மூலம் இந்த பிரபஞ்சம் கூடிய விரைவில் உங்களுக்கு பிடித்த ஒன்றை நீங்கள் விரும்பும் ஒன்றை உங்கள் கையில் சேர்த்து விடும், இதுவே பிரபஞ்சத்தின் விதி மற்றும் ரகசியம்…!!




