நெ‌த்‌தி‌லி ‌மீ‌ன் குழ‌ம்பு செய்வது எப்படி..??

Oplus_131072

நெ‌த்‌தி‌லி ‌மீ‌ன் குழ‌ம்பு செய்வது எப்படி….

தேவையானவை :

நெத்திலி மீன் – 1/2 கிலோ

புளிக்கரைசல் – 1/2 கப்

தனியா தூள் – 2 டீஸ்பூ‌ன்

பச்சை மிளகாய் – 6

கொத்துமல்லி – ஒரு கொத்து

கறிவேப்பிலை – 2 கொத்து

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூ‌ன்

மிளகாய் தூள் – 2 டீஸ்பூ‌ன்

எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – சிறிதளவு

வெந்தயம் – சிறிதளவு

வெங்காயம் – 3

இஞ்சி, பூண்டு – தேவையான அளவு

தக்காளி – 3

செய்முறை:

1.இ‌‌ஞ்‌சி, பூண்டு,வெ‌ங்காய‌ம் ஆகியவற்றை ‌விழுதாக அரைத்து எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெ‌ங்காய‌ விழுது சேர்த்து வதக்க வேண்டும்.பிறகு தக்காளி போட்டு வதக்க வேண்டும்.

2.தக்காளி நன்கு வதங்கியதும் கா‌ய்‌ந்த மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பிறகு புளி தண்ணீர் ஊற்றவு‌ம்.

3.கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்குவதற்கு ஐந்து நிமிடம் முன்பு மீனை போட்டு மீன் நன்கு வெந்ததும் இறக்கவும். சுவையான நெத்திலி மீன் குழம்பு தயா‌ர்.

 

Read Previous

குழந்தைகளுக்கு மிகவும் சத்தான கோதுமை புட்டு செய்வது எப்படி..??

Read Next

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular