இன்றைய காலகட்டத்தில் இளைய தலைமுறையினர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பதே மிகவும் குறைவுதான், ஆனால் இந்த கனியின் சாறை குடித்து வருவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய முடியும், மேலும் ரத்தம் சுத்தப்படுத்தி ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும்..
மூன்று நெல்லிக்காய்களை இடித்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும் பிறகு நன்றாக கொதித்ததும் ஐந்து மிளகு, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் பின் அதை வடிகட்டி கொள்ள வேண்டும், அத்துடன் சிறிது தண்ணீர் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இதை வாரத்திற்கு ஒருமுறை வருந்தினாள் போதுமானது, இந்த கசாயத்தை அருந்துவதன் மூலம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது, மேலும் நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் பற்கள் வலுப்பெறும் ..!!




