பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவது ஏன் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து இந்த காலகட்டம் வரை ஒரு சில கோயில்களில் எல்லாம் பார்த்தால் பசு இருக்கும். அந்த பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து பசுவை சாப்பிட சொல்வார்கள் இவ்வாறு வழிபடுவது மிகவும் நல்லது என்று நம் பெரியோர்களும் கூறுவார்கள். இந்நிலையில் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவதற்கான காரணம் என்ன அதற்கான பலன் என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபட்டால் நம் பாவம் தீரும் என்பது ஐதீகம். இதனால்தான் பசுவிற்கு அகத்திக் கீரை கொடுத்து வழிபடுகிறார்கள். அது மட்டும் இன்றி இவ்வாறு அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவதன் மூலம் நம் முன்னோர் சாபம் குடும்ப சாபம் தீரும். தீர்ந்து அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் விடுபடும் காலம் வரும். மற்றும் கடவுளின் ஆசி முழுமையாக முழு பூரணமாக கிடைக்கும். குடும்பத்தில் தடைபட்ட சுப விஷயங்கள் விரைவில் நடந்திடும். எனவே பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவது மிகவும் நல்ல பலனைத் தரும்.



