பச்சை பட்டாணி உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் இவ்வளவு நன்மைகளா..??
குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ரெடிமேட் உணவுகளை தான் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் பல பிரச்சனைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கூட வருகிறது. சத்தான உணவு முறைகளை பின்பற்றுவது நம் வாழ்நாளை அதிகரிக்க மிக முக்கியமான ஒன்று. இந்நிலையில் பச்சை பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
உடல் ஒல்லியாக இருப்பவர்கள் பச்சை பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் எடை கூடுவார்கள். பச்சை பட்டாணி நுரையீரலுக்கும் இதயத்திற்கும் வளத்தை தரும். தினமும் ஒரு கைப்பிடி அளவு காய்கறிகளுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர நுரையீரல் தொடர்பான நோய்கள் கட்டுக்குள் வரும். பீட்டா குலுக்கன் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் உடலில் கொலஸ்ட்ரால் படிவதை இது தடுக்கிறது.




