முதலில் பூஜை அறையில் வைக்கக்கூடிய பஞ்ச பாத்திர தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும். தினமும் விளக்கு ஏற்றுவதற்கு முன்பு பழைய தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு புது தண்ணீரை வையுங்கள். அதில் ஒரு கிராம்பு, இரண்டு ஏலக்காய், இரண்டு துளசி இலைகளை போட்டு விட வேண்டும் தண்ணீரை மாற்றும்போது பழைய ஏலக்காய் கிராம்பு துளசி இலைகளை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு மீண்டும் புதுசாக இந்த மூன்று பொருட்களையும் போட வேண்டும். குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பூஜை அரைக்கும் முன்பாக அமர்ந்து உங்களுக்கு தெரிந்த தெய்வத்தின் மந்திரத்தை சொல்லலாம். உதாரணத்திற்கு குலதெய்வத்தின் நாமத்தை சொல்லலாம். அப்படி இல்லை என்றால் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம் ஓம் நமசிவாய மந்திரம் சொல்லலாம். ஹனுமன் சாலிசா படிக்கலாம். அல்லது வேறு ஏதாவது அம்மன் பாடல்கள் அம்மன் போற்றிகள் தெரிந்தாலும் சொல்லலாம்.




