ரியல்மி 15 சீரிசை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்போவதாக ரியல்மி நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், 91மொபைல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரியல்மி 15T ஸ்மார்ட்போன் வருகிற ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி போன்ற ஆப்ஷன்களில் கிடைக்கும். ஃப்ளோயிங் சில்வர், சில்க் புளூ மற்றும் சூட் டைட்டானியம் என 3 வண்ணங்களில் கிடைக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.




