பணம் பெருக அமாவாசை மறுநாள் அன்று இந்த பரிகாரம் மட்டும் செய்தால் போதும். நல்ல பலனை நாம் காண முடியும். அது என்ன என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
இந்த பரிகாரம் செய்ய அம்மாவாசை மறுநாள் பிரதமை திதி அன்று மாலை வேளையில் உங்கள் இரண்டு கைகளிலும் கல் உப்பு எடுத்துக்கொண்டு நீங்கள் தியான நிலையில் அமர்ந்து எந்த கடவுள் மிகவும் பிடிக்குமோ அந்த கடவுளை நினைத்துக் கொண்டு கடன் சுமை குறைய வேண்டும் என்ற வேண்டுதலை வைக்க வேண்டும். பிரார்த்தனையும் நீங்கள் செய்யக்கூடிய இந்த தியானமும் மிகவும் ஆழ்ந்த நிலையில் இருக்க வேண்டும். பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் உங்களுடைய வேண்டுதலை முடித்துவிட்டு உங்களுடைய இரண்டு கைகளில் இருக்கும் உப்பை கொண்டு போய் அப்படியே தண்ணீரில் கரைத்து விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து 5 அம்மாவாசை வரும்பொழுது அம்மாவாசைக்கு மறுநாள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றங்களை நீங்களே கண்கூட காணலாம். இவ்வாறு செய்வதன் மூலம் கடன் சுமை குறைந்து பணவரவு அதிகரிக்கும்.




