தமிழகத்தில் மிக முக்கிய வாழ்வாதாரத்தில் ஊன்றுகோல் பனைமரம் ஆகும், பனை மரத்தில் கிடைக்க கூடிய பனை ஓலை மற்றும் பனங்கல், நுங்கு, பதநீர் மட்டும் பனம் பழம்,பனங்காய் அனைத்தும் உடலுக்கு தேவையான அனைத்து நன்மைகளும் தெரிகிறது, பனை ஓலையில் கட்டப்படும் வீடு காலங்காலமாக அப்படியே இருக்கும்..
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு அருமையான இயற்கை பானம் பதநீர் உடல் மெலிந்தவர்களுக்கு சிறந்த டானிக் இதுவே ஆகும், சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்தும் வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுகெடுப்பு சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளை குணப்படுத்துவதில் சிறந்த வழி நிவாரணையாக இருக்கிறது, பதநீரை பழைய கஞ்சியுடன் சேர்த்து புளிக்க வைத்து ஆறாத புண்கள் கொப்புளங்கள் மீது தடவினால் விரைவில் குணம் பெறும், சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால் இதில் உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் பதநீருக்கு உண்டு, உடலுக்கு குளிர்ச்சி தரும் மலச்சிக்கலை தீர்க்கும் கழிவுகளை அகற்றவும் வியர்வையை நீக்கவும் செயல்படும் குடல் வீக்கம் வயிறு தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்படுத்தும், பதநீர் சர்க்கரை சத்து நிறைந்தது என்றாலும் அது சுரக்க ஆரம்பித்து ஆறு முதல் 8 மணி நேரத்துக்குள் அதில் ஆல்கஹால் உருவாகிவிடும்..!!




