பப்பாளியின் அரிய மருத்துவ குணங்கள்..!!

Oplus_131072

பப்பாளியின் அரிய மருத்துவ குணங்கள் ..!

கரிகா பப்பயா (Carica Papaya) என்னும் தாவரவியல் பெயரினைக் கொண்ட பப்பாளிப் பழம் வெப்பப் பகுதிகளில் வளரக்கூடியது. மத்திய அமெரிக்காவிலும் மேற்கு இந்தியத் தீவுகளிலும் முதன்முதலில் அறியப்பட்ட பப்பாளி. போர்ச்சுகீசியராலும் ஸ்பானிஷ் மக்களாலும் பிற ஊர்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் பப்பாளி மரம் ஆரோக்கிய மரம் என்றும் பப்பாளிப் பழம் ஆரோக்கியப் பழம் என்றும் அழைக்கப்படுகிறது.

வைட்டமின் ஏ அதிகம் உள்ள பழங்களுள் முதலிடத்தில் மாம்பழமும் இரண்டாம் இடத்தில் பப்பாளியும் உள்ளன. பப்பாளி பழுக்கப் பழுக்க வைட்டமின் சி சத்து அதிகரித்துக் கொண்டே செல்லும். 100 கிராம் காயாக உள்ள பப்பாளியில் 32 மில்லி கிராமும், சிறிது பழுத்த பப்பாளியில் 40-72 மி.கிராமும், பாதிக்கு மேல் பழுத்ததில் 53-95 மி.கிராமும் நன்கு பழுத்ததில் 68-136 மி.கிராமும் வைட்டமின் சி இருக்கும்.

மேலும், வைட்டமின் பி1, பி2, போலிக் அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ், நார்ச்சத்து, நியாசின் போன்ற சத்துகளும் உள்ளன.

மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம் ..!!!
——————-

* பப்பாளி நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல், வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து ..!

* பித்தத்தைப் போக்கும் ..!

* உடலுக்குத் தெம்பூட்டும் ..!

* இதயத்திற்கு நல்லது ..!

* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும் ..!

* கல்லீரலுக்கும் ஏற்றது … கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும் ..!

* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ..!

* சிறுநீரகக் கோளாறுகளைத் தீர்க்கும் ..!

* பெண்களின் முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும் ..!

* இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும் ..!

* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது ..!

* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும் ..!

* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், உதவும்.

* தோலில் மினுமினுப்பை உண்டாக்கி அழகை கூட்டும். இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர் ..!

* பப்பாளிப்பழத்தை நன்கு அரைத்து பாதத்தில் பித்தவெடிப்பு உள்ள இடங்களில் நன்கு தேய்த்து உலர்ந்ததும் கழுவி விடவும் . இப்படி சில நாட்கள் செய்தால் பித்தவெடிப்பு குணமாகி விடும் ..!

* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது ..!

* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும் ..!

* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும் ..!

* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும் ..!

* பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது ..!

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் விலை மலிவான பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்பந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும், நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள் ..!

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும் ..!

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது ; எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பேயில்லை ..!!!

Read Previous

அடுப்படி இரகசியங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.. அரிசி, பருப்புகளில் வண்டுகள், பூச்சிகள் வராமல் இருக்க என்ன செய்வது..??

Read Next

சர்க்கரை வியாதிக்காரர்கள் இனி விரலை வெட்ட தேவையில்லை..?? இதோ உங்களுக்கான அற்புத மருந்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular