பப்பாளியுடன் சேர்த்து ஒரு போதும் இந்த உணவுகளை எல்லாம் உண்ணக்கூடாது..!! மீறினால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்..!!

 

சில உணவுகளுடன் எல்லாம் சில உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பது நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து கூறப்படுகிறது. ஏனென்றால் ஒரு சிலருக்கு சில உணவுகளுடன் ஒரு சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் அவர்களின் உடலில் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு மிகப்பெரிய ஆரோக்கிய குறைபாட்டிற்கு ஆளாகிறார்கள். அதுபோல தான் பப்பாளியுடன் இந்த உணவுகளை எல்லாம் சேர்த்து சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் அது நம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் அதைப்பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு சிலர் அதிகமாக விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றுதான் இந்த பப்பாளி பழம். பப்பாளி பழம் என்பது கிட்டத்தட்ட எல்லா சீசனிலும் கிடைக்கக்கூடிய ஒரு பழம். இந்த பப்பாளி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இந்த பப்பாளியில் நம் உடலுக்கு நன்மைகளை கொடுக்கக்கூடிய வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஏ, கார்போஹைட்ரேட்டுகள் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், பொட்டாசியம், புரதச்சத்து, நார்ச்சத்து, போன்றவைகள் நிறைந்துள்ளன. இந்நிலையில் இந்த பப்பாளியுடன் சில உணவுகளை சாப்பிடுவதால் தான் நம் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. பப்பாளி சாப்பிடும் போது நம் எலுமிச்சை சம்பந்தமான எந்த விதமான உணவுகளையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் இது செரிமான கோளாறுகள் மற்றும் ரத்தசோகை போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். மேலும் பப்பாளி சாப்பிட்டுவிட்டு உடனேயே டீ போன்றவற்றை நாம் ஒருபோதும் அருந்தக்கூடாது. இவ்வாறு அருந்தினால் நம் உடலில் வீக்கம் வாயு நெஞ்செரிச்சல் போன்ற செரிமான பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும். மேலும் பப்பாளியுடன் ஒருபோதும் பாலையும் சேர்த்து சாப்பிட க்கூடாது. புரதச்சத்து நிறைந்த முட்டைகளை ஒருபோதும் பப்பாளியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் செரிமான பிரச்சினைகள் மலச்சிக்கல் போன்றவற்றிற்கு நாம் ஆளாவோம். சிட்ரஸ் வகைகளான ஆரஞ்சு எலுமிச்சை திராட்சை போன்ற பழங்களுடன் பப்பாளி சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

Read Previous

நடைப்பயிற்சியின் நன்மைகள்..!! கட்டாயம் இந்த பதிவை படிங்க..!!

Read Next

கழுத்தில் உள்ள கருப்பு திட்டுக்கள் இவ்வளவு ஆபத்தானதா..?? உடனே இதை செய்யுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular