பரங்கிக்காய் பொரியல்
நல்ல முத்தாத காய பறிச்சி நல்லா கழுவிட்டு சின்ன சின்னத அரிஞ்சி.. (தோல் நீக்க தேவையில்ல) கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிச்சி, காரத்துக்கு பச்சமிளகாய நறுக்கிபோட்டு வதக்கிட்டு அதுல சின்னதா அரிஞ்சி வச்சிருக்கற பரங்கிக்காய கொட்டி கொஞ்சமா உப்பு சேர்த்து… வேகவைக்கனும்…
வேக வைக்கும்போது தண்ணிய லேசா தெளிச்சி விடனும்… அதிகம் தணௌணி சேர்த்தா கொழ கொழன்னு ஆகிடும்… கொஞ்ச நேரத்துலயே வெந்துடும்… அதுல ஒரு கைப்பிடி தேங்காய்துருவல சேர்த்து ஒரு கிண்டு கிண்டி இறக்கிட வேண்டியதுதான்…. வாசனையே ஆள தூக்கும்… வேகும்போதுபோது கொஞ்சம் நாட்டு சர்க்கரை சேர்த்தால் சுவை அட்டகாசமாக இருக்கும்.




