ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் காமராஜர்நகர் பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 63). இவர், அந்த பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை அழைத்து சாக்லெட் வாங்கி தருகிறேன். பரோட்டா வாங்கி தருகிறேன் எனக்கூறி வீரமுத்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இதுபற்றி அந்த சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வீரமுத்துவை நேற்று முன்தினம்(செப்.20) கைது செய்து சிறையில் அடைத்தனர்.



