பலாத்காரம் செய்தவரையே திருமணம் செய்ய இளம்பெண்ணை நிர்பந்தித்த போலீஸ்..!!
உ.பி.: கோத்வாடியைச் சேர்ந்த சஜித் அலி(35), வீட்டில் தனியாக இருந்த 19 வயது இளம்பெண்ணை கடந்த மார்ச்சில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வீடியோ எடுத்து மிரட்டிய அலி, அப்பெண்ணை பலமுறை சீரழித்துள்ளார். இதில் கர்ப்பமான இளம்பெண் தனது பெற்றோருடன் இதுகுறித்து போலீசில் புகாரளிக்க சென்றபோது, போலீசார் அலியை திருமணம் செய்யுமாறு அப்பெண்ணின் குடும்பத்தை நிர்பந்தித்துள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குழந்தை பிறந்த நிலையில், அலிக்கு ஏற்கனவே திருமணமானது பெண்ணுக்கு தெரியவந்ததையடுத்து, அவர் கைதானார்.




