பல்லடத்தில் கொட்டும் மழையில் தார்சாலை போடும் நெடுஞ்சாலைதுறை..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலிருந்து திருப்பூர் வரை சுமார் 15 கிலோமீட்டர் தூரம் வரை மாநில நெடுஞ்சாலை உள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலையிலிருந்தே அதிக மழை பெய்து வருகிறது. பல்லடம் திருப்பூர் நெடுஞ்சாலையில் தெற்குபாளையம் பகுதியிலிருந்து பல்லடம் வரை கொட்டும் மழையிலும் நெடுஞ்சாலைத்துறையினர் தார் அமைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் விடாமல் மழையிலும் புதிய தார் சாலை அமைத்தால் எந்தப் பயனும் இல்லை எனவும் இதனால் பொதுமக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுகிறது எனவும் புலம்பி செல்கின்றனர்.

Read Previous

பெண் என்பவள் எல்லைகள் இல்லா பேரின்பம்..!! ஆண்கள் அவசியம் படிக்கவும்..!!

Read Next

தூக்கி எறியும் எலுமிச்சை விதையில் இருக்கும் அற்புத பயன்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular