பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! அரசின் முக்கிய அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு என்று பல்வேறு வகையான நலத்திட்டங்களை அரசு செய்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளையும் கொண்டு வர வேண்டும் என்று மாணவர்களுக்கு டிஜிட்டல் வழியில் பாடங்களை கற்பிக்க அரசு அறிவுறுத்தியிருந்தது . அந்த வகையில், தற்போது அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை டிஜிட்டல் முறையில் மாற்ற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு ” கையடக்கக் கணினி என்ற டேப்லெட்” வழங்கப்பட உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.




