பழனி முருகன் கோவிலில் மூலப்பொருட்கள் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக, பஞ்சாமிர்தம் மற்றும் தங்கரத புறப்பாட்டு கட்டணங்களை உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, அரை கிலோ பஞ்சாமிர்தம் ரூ.60-ஆகவும் (பழைய விலை ரூ.45), தங்கரத கட்டணம் ரூ.2,500-ஆகவும் (பழைய விலை ரூ.2,000) உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுகள் குறித்த தங்களின் கருத்துகளை பக்தர்கள் வரும் ஜூலை மாதத்திற்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.




