Oplus_131072
“உணவு பழக்கம்” #பழமொழி வடிவில்…
*காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
*போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே..
* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்காய்.
* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.
* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல..
* தன் காயம் காக்க வெங்காயம் போதும்..
* வாழை வாழ வைக்கும்..
*அவசர சோறு ஆபத்து..
* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்..
* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு..
* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை..
*இருமலை போக்கும் வெந்தயக் கீரை..
* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.
* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி..
* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்..
* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை..
* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை..
* சித்தம் தெளிய வில்வம்..
* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி..
* சூட்டை தணிக்க கருணை கிழங்கு..
* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்..
* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு..
* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை..
* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி..
* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு..
* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி..
* வாத நோய் தடுக்க அரைக் கீரை..
* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்..
* பருமன் குறைய முட்டைக்கோஸ்..
* பித்தம் தணிக்க நெல்லிக்காய்..
” உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.




