பிரபல பெங்காலி திரைப்பட, தொலைக்காட்சி நடிகை பசந்தி சாட்டர்ஜி (88) செவ்வாய்க்கிழமை இரவு கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவர் நீண்ட காலமாக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில், மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் வீட்டிலேயே செவிலியர் மேற்பார்வையின் கீழ் சிகிச்சையில் இருந்தார். பெங்காலி தொலைக்காட்சியிலும் பூட்டு, துர்கா துர்கேஸ்வரி போன்ற பிரபலமான சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.




